Biggest ever compet...
By SashiMurali
158
10
9
  • Romance
  • romance

Description

தேடல் 2018 *************** தமிழ் நாவல் எழுத்தாளர்களுக்கான போட்டி ரொமான்ஸ் மட்டும் இல்லாமல் எந்த ஜெனர் எழுத்தாக இருந்தாலும் அதற்கான போட்டி. smtamilnovels.com, எம்எஸ் பதிப்பகம் விளம்பரதாரர்களுடன் இணைந்து நடத்துகிறது. மொத்த பரிசுகள் ரூபாய் ஒரு லட்சம்! முதல் பரிசு: ரூ. 50000 இரண்டாம் பரிசு: ரூ. 20000 மூன்றாம் பரிசு: ரூ. 10000 ஆறுதல் பரிசு: ரூ. 5000 (நான்கு பேருக்கு) வரும் தைத்திங்கள் முதல் நாள் முதல் போட்டிகள் ஆரம்பிக்கும். கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் mspublications1@gmail.com என்ற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளலாம். நடுவர்களை வரும் நாட்களில் அறிவிக்கிறோம். இது ஜனவரி 14 முதல் ஜூன் 14 வரை, நடக்கும் தொடர் போட்டி, (அதாவது, நாவல்களின் அத்தியாயங்களை தொடராக எழுதி முடிக்க கொடுக்கப்படும் கால அவகாசம்). ஒவ்வொரு நாவல்களுக்கும் வாசகர்களின் ஆதரவும், விமர்சகர்களின் கருத்துக்களையும் பொறுத்து நடுவர்களின் தீர்ப்பு அமையும். வாசகர்களுக்கும் சிறப்பு பரிகள் காத்திருக்கின்றன. *smtamilnovels.com, MS Publications ஆகிய நிறுவனங்களை சார்ந்தவர்களுக்கோ, அவர்களது உறவினர்களுக்கோ போட்டியில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடையாது. ** வேறு எந்த விதமாக போட்டி முடிவுகளை மாற்றி அமைக்க முயற்சி செய்தாலும், அவர்களை போட்டியில் இருந்து விலக்க நடுவர்கள் குழுவுக்கு அதிகாராம் உண்டு. ***நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. **** போட்டியில் பங்கு கொள்ள விரும்புகிறவர்கள், நடுவர்களின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்கள் ஆகிறார்கள். எந்த வகையிலும் விதிமுறைகளை நேர்மையில்லாத வழியில் மீறக் கூடாது. ஒருவரே எத்தனை நாவல்களை வேண்டுமானாலும் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் முடிக்கலாம். அனைத்தும் போட்டிக்கும் எடுத்துக் கொள்ளப் படும். இது நல்ல எழுத்துக்களை தேடும் ஒரு முயற்சி! அறிமுகமான எழுத்தாளர்களாக இருந்தாலும் அறிமுக எழுத்தாளர்களாக இருந்தாலும் அனைவரையும் வரவேற்கிறோம்! வாழ்த்துகள்!

Biggest ever online competition

Continue Reading on Wattpad
Biggest e...
by SashiMurali
158
10
9
Wattpad